பொலிஸாரல் தாக்கபட்ட இளைஞன் வைத்தியசாலையில்

Published By: Robert

13 Mar, 2016 | 12:20 PM
image

பொகவந்தலாவ கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 32வயது மதிக்கதக்க கோவிந்தசாமி ஞானகண்ணா என்ற இளைஞன் கடந்த 8ம்,9ம் திகதி இரண்டு நாட்களாக வெலிகடை பொலிஸாரால் தடுத்து கடுமையாக தாக்கபட்ட இளைஞன் நேற்றைய முன்தினம் இரவு பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக  பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் கொழும்பு வெலிகடை பகுதியில் ஆடைதொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும் கடந்த மாதம் 11ம் திகதி பொகவந்தலாவையில் இருக்கும் தனது வீட்டுக்கு விடுமுறை பெற்று கொண்டு வந்திருத்தபோது, குறித்த இளைஞனின் மனைவியின் வங்கி கணக்கு இலக்கத்திற்கு 15 ஆயிரம் ரூபா ஆடைதொழிற்சாலையின் உரிமையாளர் வைப்பிலிடப்பட்ட பணத்தை பெற்று கொண்ட இளைஞன் மீண்டும் ஆடைதொழிற்சாலைக்கு தொழிலுக்கு செல்லாமை இருந்ததன் பொருட்டு குறித்த ஆடைதொழிற்சாலையின் உரிமையாளர் வெலிகடை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்து இருந்தமை குறிப்பிடதக்கது.

முறைபாட்டினை பதிவு செய்து கொண்ட வெலிகடை பொலிஸார் கடந்த 07ம் திகதி பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்திற்கு, கோவிந்தசாமி ஞானகண்ணா என்பவரை வெலிகடை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு தகவல் அனுப்ப பட்டமைக்கு அமைய குறித்த இளைஞன் 08ம் திகதி வெலிகடை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தார்.

வெலிகடை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற இளைஞனை தான் 2 இலட்சம் ரூபா பணத்தினை கொள்ளையடித்து உள்ளாதாகவும் இந்த குற்றசாட்டினை ஏற்றுகொள்ளுமாறு கூறி குறித்த இளைஞனை வெலிகடை பொலிஸார் கடுமையாக தாக்கியதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் கோவிந்தசாமி ஞானகண்ணா நேன்றைய தினம் முறைபாட்டினை பதிவுசெய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்கப்பட்ட இளைஞனுக்கு வெலிகடை பொலிஸாரால் கடந்த 10ம் திகதி பினை வழங்கப்பட்ட பிறகு குறித்த இளைஞன் நேற்றைய தினம் வெலிகடை பொலிஸாருக்கு எதிராக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இளைஞனின் முறைபாட்டினை பதிவு செய்து கொண்ட பொகவந்தலாவ பொலிஸார் சம்பவம் தொடர்பாக அட்டன் பொலிஸ் வலயத்திறக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படயிருப்பதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன், எஸ்.சதீஸ்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு அரசாங்கமே பொறுப்பு;...

2026-07-12 15:27:29
news-image

சகல நீதிபதிகளினதும் பதவிக்காலம் 2 ஆண்டுகள்...

2026-07-12 16:07:41
news-image

டெங்கு தடுப்பு: மாணவர்கள் முழுக் கை,...

2026-07-12 20:12:01
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு விஜயதாசவே பொறுப்பு...

2026-07-12 13:46:25
news-image

இராணுவ அதிகாரிகள் மீதான அரசியல் பழிவாங்கலுக்கு...

2026-07-12 19:03:48
news-image

இராகலையில் வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கு நிரந்தர...

2026-07-12 17:46:58
news-image

இலங்கை சொகுசு பேருந்து சங்கத்தினால் 'மாவதே...

2026-07-12 17:28:02
news-image

மஹமோதர வைத்தியசாலையை சிறைச்சாலையாக்கும் தீர்மானம் மறுபரிசீலனை...

2026-07-12 17:21:07
news-image

தமிழரசின் மறைந்த முன்னாள் தலைவர் இரா....

2026-07-12 17:19:33
news-image

ஓய்வு பெறும் சுவிட்சர்லாந்து உயர்ஸ்தானிகருக்கு இலங்கைத்...

2026-07-12 16:44:33
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன்...

2026-07-12 16:11:46
news-image

ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து -...

2026-07-12 16:11:06