வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தீர்த்தத்திருவிழா நேற்று கற்கோவளம் வங்கக்கடலில் இடம்பெற்ற போது ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி இருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

நேற்று மாலை வங்கக்கடலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தமாடினார்.

இதன்போது பல படகுகள் கடலில் தீர்த்த நிகழ்வின் போது பயன்படுத்தப்பட்டது. 

இதன் போது படகின் வெளியிணைப்பு இயந்திரம் வெட்டிய நிலையில்  நாகர்கோவில், புனிதநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் அம்புலன்ஸ் வண்டி மூலம் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.