எங்கள் பூர்வீக காணிகளுக்குள் எங்களை விடாததற்கு காரணம் என்ன? இந்த இடத்தை அரசியல் வாதிகள் யாரும் வாங்கி இருக்கின்றார்களா? அதனால் வனவரிபாலன சபை விடுகின்றார்கள் இல்லையா?  அல்லது இந்த இடம்வாங்கிய அரசில் வாதி விடுகின்றார் இல்லையா? என்பது புரியாத புதிராக இருக்கின்றது 

எனவே எங்கள் காணிக்குள் எங்களை செல்வதற்கு அனுமதிக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் எங்கள் முடிவுக் பாரதூரமாக இருக்கும் என பொத்துவில் கனகர் கிராமம் 60 கட்டையில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட இணைப்பாளரிடம் தெரிவித்தனர் 

பொத்துவில் கனகர் கிராமம் 60 கட்டை பிரதேச மக்கள் யுத்ததினால் இடம்பெயர்து 28 வருடங்களாகிய நிலையில் அவர்களின் பூர்வீக காணியில் வனபரிபாலன திணைக்களம் கையடக்கியுள்ளது இதனை மீட்பதற்கான தொடர் நில மீட்பு போராட்டம் 42 நாட்களாக முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த போராட்ட இடத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட இணைப்பாளர் த.சுரேஷ், மாவட்ட செயலாளர் கு.ஜெகநீதன்,  பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் க. சசிகரன் ஆகியோர் சென்று அவர்களை சந்தித்து கொடுப்பனவுகளை வழங்கியிருந்தனர் இதன்போது அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.