14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் ஐந்தாவது போட்டியில் இன்று பலம்பெருந்திய இந்திய அணியை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.

அதன்படி இன்று மாலை 5.00 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

நடந்து முடிந்த 'சுப்பர் 4' சுற்றில் இந்திய அணி எதிர்கொண்டு இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி, இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. ஆகையால் இன்று இடம்பெறவுள்ள இந்திப் போட்டி இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

இதேவேளை நடந்து முடிந்த சுப்பர் 4' சுற்றின் இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவிக்கொண்ட காரணத்தினால், ஆப்கான் அணி தொடரிலிருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

எனினும் இன்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளமை குறிப்பிடத்தக்கது.