கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட ரயிலுடன் ஒருவர் மோதுண்டு பலத்தகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு  கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட ரயிலுடன் ஒருவர் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவம் இன்று செவ்வாய்கிழமை பகல் 01.45 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படடுள்ளது.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலுடன் ஹட்டன் மல்லியப்பு சந்தியிலுள்ள  ரயில் கடவைக்கு அருகிலேயே குறித்த நபர் ரயிலுடன் மோதுண்டு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை ரயில் ஊழியர்கள் மீட்டு டிக்கோயா வைத்தியசாலையில் அனுமத்திதுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு ரயிலுடன் மோதுண்ட நபர் 40 வயது மதிக்கதக்க நபர் எனவும் அவர் மதுபோதையில் இருந்ததன் காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.