கிளிநொச்சி பரந்தன் நகரத்துக்கான புதிய பஸ் நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஆரம்பமாகியது கரைச்சி பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பரந்தன் பஸ் நிலையத்தை நவீனமயமாக்கி உருவாக்கும் முடிவுக்கு அமைய மாகாணத்தினுடைய குறித்தொதுக்கப்பட்ட நிதி பெறப்பட்டு வீதி அபிவிருத்தி திணைக்களத்தினுடைய பஸ் நிலைய வடிவமைப்புடன் அப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

 சுமார் 04 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட இருக்கிற குறித்த பஸ் நிலையத்துக்கான அடிக்கல் இன்று நண்பகல் 12.00 மணியளவில் நாட்டி வைக்கப்பட்டது. 

மிக நீண்ட காலமாக கிளிநொச்சியினுடைய உப நகரமாக விளங்கக்கூடிய பரந்தன் நகரத்துக்குரிய வடிவமைப்பு இன்றி காணப்பட்டதாலயே பஸ் நிலையத்தை நவீனப்படுத்தி ஒரு பஸ் நிலையத்துக்கான உள்தள வசதிகளை ஏற்படுத்தும்.

 ஆரம்ப முயற்சியாக பஸ் நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து பஸ் நிலையத்தை சூழ்ந்துள்ள பகுதிகளை நவீனமயப்படுத்தப்படுவதுடன் 08 மில்லியன் ரூபா செலவில் பொது மலசலகூடம் நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, பூநகரி, மன்னரர், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களில் இருந்து வருகின்ற ஏராளமான மக்கள் தரித்து செல்லுகின்ற கேந்திரஸ்தானமாக இருந்து வருகிறது.

 எனவே இந்த பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்த வேண்டும் என கரைச்சி பிரதேச சபை மாகாண முதலமைச்சருக்கு கொடுத்த கோரிக்கைக்கு அமைய வீதி அபிவிருத்தி சபையினுடைய வடிவமைப்பு மற்றும் அனுசரணையுடன் இந்த பணிகள் இன்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாளிகிதன், உப தவிசாளர், உறுப்பினர்கள், அப் பிரதேச அமைப்பினர் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.