(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார கொள்கையின் காரணமாக  ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. எனினும் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பற்ற விதமாகவே செயற்படுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக தெரிவித்துள்ளார். 

மேலும் ரூபாவின் பெறுமதியின் வீழ்ச்சிக்கு வெகுவிரைவில் தீர்வு காணாவிடின் நாட்டின கடன் தொகை 300 பில்லியனாக அதிகரிக்கும் அபாயம் தோன்றும் எனவும் சுட்டிக்காட்டினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி தலைமையகத்தில் இன்று இடம் பெற்ற  ஊகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

உலக  சந்தையில் இலங்கையின் உற்பத்திகள் இன்று வீழ்ச்சியடைந்து வருகின்றன. ஆனால் அரசாங்கம் மக்கள் மத்தியில் பொய்யான நம்பிக்கையினை மாத்திரம் வழங்கி வருகின்றது.   நாட்டு மக்களுக்காக அரசாங்கம் செயற்பட வேண்டுமே தவிர சர்வதேசத்தின் விருப்பத்திற்கு அமைய அல்ல என்ற விடயத்தை  மக்களே  வெகுவிரையில்  புரிய வைப்பார்கள்.

டொலருடன் ஒப்பிடுகையில்  ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடையுமாயின் ஒரு டொலரின் பெறுமதி 200 ரூபாவாக உயர்வடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.