தங்கள் தலைவரை ‘சிம்ட்டாங்காரன்’ என்று தளபதியின் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

தீபாவளியன்று வெளியாகவிருக்கும் தளபதி விஜயின் சர்கார் படத்திலிருந்து முதல் பாடல் நேற்று வெளியானது. வெளியான நான்கு மணி தியாலத்திற்குள் ஒரு மில்லியன் ரசிகர்கள் இதனை பார்வையிட்டிருக்கிறார்கள். தற்போது வரை ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

ஆனால் ரசிகர்களில் சிலர் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்..’ என்ற ரேஞ்சில் எதிர்பார்க்க, இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் ‘சிம்ட்டாங்காரன்...’ என்று கொடுத்திருக்கிறாரே என்று கவலைப்படுகிறார்கள்.

இதில் சில ரசிகர்கள் பாடலாசிரியர் விவேக்கிற்கு கையடக்க தொலைபேசி சிம்ட்டாங்காரன் என்றால் என்ன என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவரும் பொறுப்பாக சிம்ட்டாங்காரன் என்றால் பயமற்றவன் என்று பொருள் சொல்லியிருக்கிறார். அத்துடன் இது சென்னை தமிழ் வார்த்தை என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இதையெல்லாம் கேட்ட விஜய் ரசிகர்கள், தற்போது தங்கள் தலைவர் தமிழின் புகழைப் பரப்புகிறார் என்று பெருமிதப்படத் தொடங்கியிருக்கிறார்கள்.