இம் மாதம்  29 ஆம் திகதி யாழ் முற்றவெளி மைதானத்தில் (வீரசிங்கம் மண்டபதிற்கு முன்னால்) காலை 10.00 மணி தொடக்கம் Cash Bonanza நிகழ்வு இடம்பெறும். காலை 10.00 மணி தொடக்கம் வரும் பொது மக்கள் அனுபவித்து மகிழும் வகையில் இசைநிகழ்ச்சி மற்றும் bungee jumping சித்திர போட்டிகள், பயிட்சிப்பட்டறைகள், சிறுவர் விளையாட்டு பகுதி,மொபிடெல் சேவைகள் அளிக்கும் சிறு கடைத்தொகுதிகள் உள்ளிட்ட பல செயற்பாடுகள் மற்றும் கேமிங் வலயமானது, உயர் துரித 4Gயினை இணைப்பினால் வலுப்படுத்தப்பட்ட அதே வேளை அழகு கலாச்சார மையம் மற்றும் பற்சிகிச்சை மையம் ஆகியன தனித்துவமிக்க அனுபவத்தை தரும் சேவைகளை பெறலாம்.

மொபிடெல் உபஹார திட்டத்தின் கீழ் சிரேஷ்ட பிரஜைகளின் நலன்கருதி ஒழுங்கு செய்யப்பட்ட கண் கிளினிக். இந்த விசேட கண் கிளினிக் ஆனது புகழ்பெற்ற கண் சத்திரசிகிச்சை நிபுணர்களின் பங்களிப்புடன் இடம்பெறும். சிரேஷ்ட பிரஜைகளுக்கு அனுகுலமளிக்கும் வகையில் 1000 வாசிப்பு கண்ணாடிகள் வழங்கப்படும் இவ் அணைத்து இலவசமாக வழங்கப்படும்.

இது செப்டம்பர் 29 ஆம் திகதி, 2018, பி.ப 7.30 முதல்,வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் உள்ள முற்றவெளி மைதானத்தில்,சீதுவ சக்குரா மற்றும் சாரங்கா இசைக்குழுக்கள் பங்கேற்றும் ஒரு நிகழ்ச்சி .பிரபல இந்தியப் பின்னணிப் பாடகர்களான சத்யபிரகாஷ் மற்றும் ரீட்டா இருவரும் இந்த நிகழ்சியில் பங்கேற்று சிறப்பிக்கிறார்கள்.பிரபலமான பாடல்களான ஆளப்போறான் தமிழன் (மெர்சல்) ராசாளி (அச்சம் என்பது மடமையடா),ஒன்ன விட்டா யாரும் (சீமராஜா) போன்ற பாடல்களை சத்யபிரகாஷூம், வாடா மாப்பிளை (வில்லு),அலேக்ரா (கந்தசாமி), மொளகாப் பொடி ( சாமி2) போன்ற பாடல்களை ரீட்டாவும் பிரபலமான இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்களென்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் இணைந்து நம் நாட்டுப்பாடகர்களான நவகம்புர கணேஷ்,சமீரா ஹசன்,ரகுநாதன் மற்றும் ஸ்டான்லி அனைவரும் பாடி மகிழ்விக்கவுள்ளார்கள்.