ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் ஐவர் கைது

Published By: Digital Desk 4

25 Sep, 2018 | 03:15 PM
image

(இரோஷா வேலு) 

கண்டி லேவல் பாளத்தினருகில் வைத்து ஹெரோயின் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஐந்து சந்தேகநபர்களை கண்டி ஊழல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயசிங்கவின் தலைமையிலான குழுவொன்று நேற்று கைதுசெய்துள்ளது. 

கண்டி மற்றும் கிராந்துகோட்டே பிரதேசங்களைச் சேர்ந்த 18 முதல் 39 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லேவல் பாளத்தினருக்கில் போதைப்பொருள் வியாபாரமொன்று மேற்கொள்ளப்படுவதாக கண்டி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தொலைப்பேசி அழைப்பொன்றுக்கமைவாக விரைந்து செயற்பட்ட பொலிஸாரால் குறித்த ஐவரும் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடமிருந்து 2 கிராம் 250 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளும் மற்றும் 36 கிராம் 390 நிறையுடைய கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து குறித்த ஐவரையும் கைதுசெய்துள்ள பொலிஸார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் குறித்த ஐவரில் மூவர் கிராந்துகோட்டே பொலிஸாரால் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 

மேலும் குறித்த ஐவரும் கட்டுகஸ்தோட்டை, தெல்தெனிய, குண்டசாலை, கிராந்துகோட்டே மற்றும் கலகா போன்ற பிரதேசங்களுக்கு போதைப்பொருட்களை சில்லறை விற்பனைக்கு எடுத்துச் செல்லும் முகவர்கள் என்றும் இவர்கள் ஐவர் மீது பல்வேறுபட்ட போதைப்பொருள் குற்றச்செயல்கள் தொடர்புடையவர்கள் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐவரையும் இன்றைய தினம் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவிருந்த  கண்டி ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51