பூமி­யி­லி­ருந்து 180  மில்­லியன்  மைல் தொலை­வி­லுள்ள ரயுகு  விண்­கல்லை சென்­ற­டைந்­துள்ள ஜப்­பா­னிய ரோவர் விண்­கல உப­க­ர­ணங்கள்,  அந்த விண்­கல்லின் மேற்­ப­ரப்பை பிர­தி­ப­லிக்கும் அரிய புகைப்­ப­டங்­களை பூமிக்கு அனுப்பி வைத்­துள்­ளன.தகர கொள்­கலம் வடி­வி­லான  மேற்­படி ரோபோ விண்­கல உப­க­ர­ணங்கள்  அதில் பொருத்­தப்­பட்­டுள்ள புகைப்­ப­டக்­க­ரு­விகள் மற்றும் உணர்­க­ரு­விகள் மூலம்  இந்தப் புகைப்­ப­டங்­களை  எடுத்து  அனுப்பி வைத்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அந்த இரு ரோபோ விண்­கல உப­க­ர­ணங்­களும்  எது­வித தடை­யு­மின்றி தொடர்ந்து செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தாக  ஜப்­பா­னிய விண்­வெளி முகவர் நிலையம் தெரி­விக்­கி­றது. 

லின் மேற்­ப­ரப்பில் 15  மீற்றர் உய­ரத்தில் சுமார் 15  நிமிட நேரம் பய­ணித்து இந்தப் புகைப்­ப­டங்­களை எடுத்­துள்­ள­தாக மேற்­படி விண்­வெளி ஆராய்ச்சி நிலை­யத்தின் திட்ட முகா­மை­யாளர் யுயிசி தஸுடா தெரி­வித்தார்.