கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் கலகம  ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் கண்டி பொலிஸ் விளையாட்டரங்களில் இன்று  பிற்பகல் இடம்பெறவுள்ளது. 

கீழே விழுந்த போது  சுயநினைவை இழந்த கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த, 9ம் திகதி இறைபாதம் அடைந்தார். 

அத்துடன், இன்றையதினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.