ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நாடு முழுவதும் சென்று உண்மைகளை எடுத்துரைப்போம் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

‘பொது துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் திறனை மோடி தலைமையிலான மத்திய அரசு குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக காங்கிரஸ் முன் வைக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையில் இல்லை.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஆண்டுதோறும் ஹிந்துஸ்தான் ஏரோ நாடீக் நிறுவனத்திற்கு 10,000 கோடி ரூபா அளவிலான பணிகள் அளிக்கப்பட்டன.

ஆனால் தற்போது ஆண்டுதோறும் 22,000 கோடி ரூபா மதிப்பிலான பணிகள் அளிக்கப்படுகின்றன. அத்துடன் ரஃபேல் போர் விமான வாங்குவதற்கான ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் செய்து வரும் பொய் பிரசாரத்தை நானும் இதர அமைச்சர்களும் நாடு முழுவதும் பயணித்து, இந்த விவகாரம் தொடர்பான உண்மைகளை மக்களிடத்தில் எடுத்துரைப்போம். அத்துடன் இந்த விவகாரத்தில் கருத்துரீதியிலான போரை மத்திய அரசு முன்னெடுக்கும்.’ என்றார்.