வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீகிரிய குன்றை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட இளைஞர்களை உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு, பிதுரங்கல ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தானியகம ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் சிலர் பிதுரங்கல கல் மீது எரி, சீகிரியா பூமியை நோக்கி நிர்வாணமாக நிற்கும் புகைப்படங்கள் சிலவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

அரை மற்றும் முழு  நிர்வாணமாக எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டமையினால்  தற்போது சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.

புனித பூமியை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட இந்த இளைஞர்களை உடனடியாக கைது செய்யுமாறு பரவலாகம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.