ஹிமாச்சல பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்ட 35 ஐ.ஐ.டி மாணவர்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அம் மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தின் பெருவாரியான இடங்களில் நிலச்சலிவு ஏற்பட்டுள்ளது.

சுற்றுலாத் தளமான குலு மனாலியின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் அங்கு நிலச்சரிவினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தில் சிக்கி இது வரையில் 16 பேர் பலியாகியுள்ளனர்.

இந் நிலையில் ஹிமாச்சல பகுதியில் மழை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 35 மாணவர்களும் திடீரென காணாமல் போயுள்ளனர்.

35 மாணவர்களைத் தவிர மழை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டடிருந்த மேலும் 20 பேரை காணவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாதவாறு மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை கல்லூரிகள் அரச நிறவனங்களுக்கு கால வரையறையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு நிலச்சரிவுகளில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.