ஜனாதிபதி பணிக்குழுவின் முன்னாள் பிரதானி ஐ. கே. மஹாநாமா மற்றும் அரச மரக்கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திசாநாயக்க ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.20 இலட்சம் ரூபா கப்பம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இருவரையும் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.