தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி யாழ். பொலிசாரினால் , யாழ்.நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

குறித்த வழக்கில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கூடாது எனவும் நினைவு கூரும் உரிமை உண்டெனக் கோரி , ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமானசிங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்டடவுள்ள நிலையில் நீதிமன்ற சூழலில் பலர் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.