பலத்த காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சினால் நாட்டின் பல பகுதிகளிம் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கிணங்க இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பகுதிகளில் 119 வீடுகளும் அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய ஆகிய பகுதிகளில் சுமார் 200 வீடுகளும் தெவுந்தர பகுதியில் 15 வீடுகளும் பலத்த காற்று மற்றும் மழையினால் சேதமடைந்துள்ளன.

இவ்வாறு சேதமடைந்த வீடுகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.