2018 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரரானார் லூகா மோட்ரிச்

Published By: Vishnu

25 Sep, 2018 | 10:02 AM
image

குரோசியா அணியின் தலைவரான லூகா மோட்ரிச் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதினை சுவீகரித்துள்ளார்.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்து சிறந்த வீரருக்கான விருதை வழங்கி வருகிறது. 

இந் நிலையில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதனை தட்டிச் செல்ல போர்த்துக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, எகிப்து அணியின் மொஹமட் சலா மற்றும் குரோஷியா அணியின் தலைவர் லூகா மோட்ரிச் ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவியது. 

இதில் 33 வயதான லுகா மோட்ரிச், ரொனால்டோ மற்றும் மொஹமட் சலாவை பின்னுக்குத் தள்ளி 2018 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கால்பந்து வீரராக மகுடம் சூடியுள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்ற உலக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல்முறையாக குரோசியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதற்கு அணித் தலைவர் மோட்ரிச் முக்கிய பங்காற்றியிருந்தார். உலக கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியமையால் அவருக்க தங்க கால்பந்து விருதும் வழங்கி வைக்கப்பட்டது. 

அத்துடன் ஆண்டின் சிறந்த மகளிர்க்கான விருதினை பிரேஸில் அணியைச் சேர்ந்த மார்டோவுக்கும், சிறந்த பயிற்சியாளருக்கான விருதினை 2018 ஆம் ஆண்டின் பிபா கிண்ணத்தை சுவீகரித்த பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஸ்ஹாம்ப்ஸுக்கு வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெலிக்கன்ஸின் சொந்த கோல் உதவியுடன் சம்பியன்ஸ்...

2026-01-25 07:41:17
news-image

இலங்கையை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இங்கிலாந்து

2026-01-24 22:32:38
news-image

சம்பியன்ஸ் லீக்கில் தோல்வி அடையாத அணி...

2026-01-24 22:11:01
news-image

இங்கிலாந்துடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்:...

2026-01-24 18:29:16
news-image

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில்...

2026-01-24 22:09:16
news-image

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இலங்கை...

2026-01-24 13:45:02
news-image

சென் மேரிஸ் கழகத்திற்கு தீர்மானம் மிக்க...

2026-01-24 13:05:56
news-image

டயலொக் தலைமையகத்தில் ஐசிசி ஆடவர் ரி20...

2026-01-23 20:19:55
news-image

19 வயதின் கீழ்  ஆண்க  உலகக்...

2026-01-23 17:19:50
news-image

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்...

2026-01-23 14:58:50
news-image

தீர்மானம் மிக்க நியூ ஸ்டார் -...

2026-01-23 17:21:25
news-image

ஐசிசி 19 வயதின்கீழ் ஆண்கள் உலகக்...

2026-01-23 12:52:20