நாட்­டி­லி­ருந்து வெளி­யேற இலங்­கை­யர்கள் 62 ஆயி­ரத்து 338 பேருக்கு வெளி­நாட்டுப் பயணத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள தக­வல்கள் தெரிவித்துள்ளது.

நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை மையப்­ப­டுத்தி இந்த தடை உத்­த­ர­வுகள் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்  இதில் 30 ஆயிரம் பேர் வரை­யி­லானோர் பாது­காப்பு தரப்­புக்­களைச் சேர்ந்­த­வர்கள் எனவும் திணைக்­க­ளத்தின் உயர் அதி­காரி ஒருவர் கூறினார். பாது­காப்புத் தரப்­பி­னரில்  உயர் மட்­டத்தில் இருந்து கடை நிலை வரை­யி­லான உத்­தி­யோ­கத்­தர்கள்  பயணத் தடை விதிக்­கப்­பட்­டோரில் அடங்­கு­வ­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.

நீதி­மன்­றங்கள், இரா­ணுவ நீதி­மன்றம் ஊடாக இந்த நபர்கள் வெளி­நாடு செல்ல தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. 30 ஆயிரம் பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு மேல­தி­க­மாக  அர­சி­யல்­வா­திகள், போதைப்பொருள் கடத்­தல்­கா­ரர்கள்,  புலம்பெயர் தமிழ் அமைப்­புக்­க­ளுடன் தொடர்பில் இருக்கும் சிலர், மத கடும்­போக்­கா­ளர்கள் என வெளி­நாட்டுப் பயணத் தடை பட்­டியல் நீண்டுள்ளது.