பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு அப் பகுதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப் வழியாக போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாகன சாரதிகளை வேறு மாற்றுவழிகளை பயன்படுத்தி தற்காலிகமாக போக்குவரத்து நடவகடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அத்துடன் முறிந்து வீழ்ந்த மரத்தை அப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.