தமிழக அரசினால் அண்மையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட 100000 புத்தகங்களில் 50000 புத்தகங்கள் யாழ் நுலகத்திற்கு வழங்கியுள்ள நிலையில் மிகுதி 50000 ஆயிரம் புத்தகங்களை ஏனைய மாகணங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வேலுசாமி இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் தமிழ் நாட்டு அரசாங்கத்தால் கல்வி இராஜாங்க அமைச்சிற்கு கையளித்த 100000 புத்தகங்களில் 50000 ஆயிரம் புத்தகங்களை யாழ் நூலகத்திற்கு வழங்கியிருக்கின்றோம். மிகுதி 50000 ஆயிரத்தை ஏனைய மாகாணங்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கல்வி இராஜங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ் நூலகத்திற்கு வழங்கப்பட்ட பின்பு மிகுதியான புத்தகங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துகள் கூறப்பட்ட நிலையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இந்தியாவின் தமிழ் நாடு அரசாங்கத்தின் மூலமாக எங்களுடைய இராஜாங்க கல்வி அமைச்சிற்கு 100000 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அதனை பெற்றுக் கொள்வதற்காக நாம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த முயற்சியின் பயனாகவே இவை கிடைக்கப்பெற்றன.
அதில் 50000 ஆயிரம் புத்தகங்களை அண்மையில் தமிழ்நாடு கல்வி பள்ளித்துறை
அமைச்சர் கே.ஏ.செய்கோட்டையனின் பங்குபற்றலுடன் யாழ் நூலகத்திற்கு கையளித்தோம். மிகுதியான புத்தகங்களை மத்திய, ஊவா, சப்ரகமுவ, உட்பட ஏனைய மாகாணங்களுக்கும் பாடசாலையில் இருக்கின்ற வாசிகசாலைகளின் அடிப்படையில் வழங்குவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
மிகுதியாகவுள்ள 50000 ஆயிரம் புத்தகங்களும் எங்களுடைய கல்வி அமைச்சில் பாதுகாப்பாக
வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பகிர்ந்தளிப்பதற்காக நாம் அந்தந்த மாகாணங்களில் மாகாண கல்வி பணிப்பாளர்கள் ஊடாக தகவல்களை பெற்றுக் கொண்டு இந்த புத்தகங்களை கையளிக்க இருக்கின்றோம்.
எனவே இது தொடர்பாக யாரும் குழப்பமடைய தேவையில்லை. அனைத்து விடயங்களும் வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கப்படும்.
கடந்த காலங்களில் அவ்வாறான வெளிப்படை தன்மையுடன் அமைச்சுகள் செயற்பட்டதா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். நாங்கள் மீதமுள்ள புத்தகங்களை மிக விரைவில் ஏனைய மாகாணங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM