(எம்.ஆர்.எம்.வஸீம்)

சிரேஷ்ட உறுப்பினர்களை அமைப்பாளர் பதவிகளில் இருந்து நிக்கியமையானது கட்சியின் அழிவுப்பாதைக்கான ஆரம்பமாகும். நாட்டை வெளிநாட்டுக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்தில் தொடர்ந்து இருக்க முடியாது என்பதனாலே வெளியேறினோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணியில் இருக்கும் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரை கட்சி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்க கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில்,

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இனி ஒருபோதும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறப்போவதில்லை. அதற்காக அவர்கள் பல்வேறு காரணங்களை தெரிவித்துக்கொண்டு 2020 வரை இருப்பார்கள். அதனால் கட்சியின் கொள்கையை பாதுகாக்கக்கூடியவர்களுடன் இணைந்துகொண்டு எமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கே நாங்கள் கலந்துரையாடி  வருகின்றோம் என்றார்.