சர்வதேச செவிப்புலன் வலுவற்றோர் தினத்தை முன்னிட்டு  இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் மத்திய சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான நிகழ்வு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சு, சமூக சேவை திணைக்களம், இலங்கை தேர்தல் ஆணைக்குழு, அம்பாரை மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் அமைப்பு  ஆகியவற்றின் அனுசரணையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

செவிப்புலன் வலுவற்றோர்களுக்கான வாக்குரிமை தொடர்பாக தேர்தல் திணைக்கள அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டதுடன், செவிப்புலன் வலுவற்றோர்களிடையே மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட சித்திரம், நடனம், ,நாடக போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் மத்திய சம்மேளத்தின் தலைவர் பிறைன் சுசந்த கொடிதுவக்கு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சமன் ரத்னாயக்க, அம்பாரை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் திலின விக்கிரமரத்ன, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா உள்ளிட்ட திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.

இதன் பிரதான நடை பவணி 'சைகை மொழியுடன் சேர்ந்து அனைவரும் ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்திலிருந்து ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக சம்மாந்துறையை சென்றடைந்தது. இதில் நாட்டிலுள்ள மூவினங்களையும் சேர்ந்த செவிப்புலன் வலுவற்றோர்கள் கலந்து கொண்டனர்.