(நா.தனுஜா)

காணாமல்போனோர் தொடர்பில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய பரிந்துரைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தோம். அப்பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவினால் காணாமல் போனோர் அலுவலகம் சமர்ப்பித்த பரிந்துரைகள் விரைவாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கின்றோம் என காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

காணாமல் போனோர் அலுவலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பில் விஜேதாஸ ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் செயற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.