(ஆர்.விதுஷா)

கலஹ - குறுகல் ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போய் இருந்த சிறுவன் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.  

குறித்த சிறுவன்  நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 1.30 மணியளவில் குறுகல்ஓயாவில் நீராட சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தான்.

மேற்படி  சிறுவனை தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் கலஹா  பொலிஸார் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று காலை 6.00 மணியளவில் மேற்படி சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

தெல்தொட்ட பல்லேகம பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சேர்ந்த மின்ஹாஷ் அஹமட் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  பொலிஸ்  ஊடகப்பிரவு தெரிவித்துள்ளது.