மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணையடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை கிண்ணையடி விஷ்ணு ஆலயத்தின் மகோற்சவ விழாவின் இறுதி நாளை முன்னிட்டு கல்குடா கடலில் தீர்த்தோற்சவத்தினை நிறைவேற்றி விட்டு ஆலயம் நோக்கி உழவு இயந்திரத்தில் பயணத்த அடியார்களே இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

உழவு இயந்திரமானது, தமது வேக கடடுப்பாட்டினை இழந்து தடம் புறன்டதினால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில்; 7 பேர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏனையோர்கள் வாழைச்சேனை அதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திரமும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்ட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்