(இராஜதுரை ஹஷான்)

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள  தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தற்போது  வழக்கு தாக்கல் செய்யப்பபட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் நிமித்தமே  இவர்கள் விடுதலை செய்யப்படுவார்களே தவிர உண்ணாவிரதமிருக்கும் போராட்டத்தின் மூலம் அல்ல  என சிறைச்சாலை புனரமைப்பு மற்றும் நீதியமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தில் நீதித்துறை சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளது ஆகவே சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே   அவ்விடயத்தில் அரசியல் கைதிகள் விதிவிலக்கல்ல எனவும் குறிப்பிட்டார்.