திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுங்காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்விபத்து இன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் தலவாக்கலை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.

இதில் முச்சக்கரவண்டியை செலுத்திய நபரே விபத்துக்குள்ளாகி படுங்காயமடைந்துள்ளார்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.