நாட்டின் நகர அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு விருத்தி என்பவற்றுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியினை வழங்கத் தீர்மானித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இயக்குநர் சபையானது தொழில்நுட்பக் கடனுதவித் திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்திக்கென மேற்படி கடனுதவியை வழங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. காலநிலைக்கேற்றவாறான உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வதற்குப் பொருத்தமாக நகரங்களை மேலும் மாற்றியமைத்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் குறித்த கடன் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த கடனுதவியின் மூலம் நாட்டின் 29 நகரங்களில் நகர அபிவிருத்தி, உட்கட்டமைப்பு விருத்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவமுறை விருத்தி என்பன மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.