(எம்.மனோசித்ரா)

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான அறிக்கைகள் கட்சி தலைவர்களுக்கும் வழங்கப்பட்டு அது தொடர்பில் கட்சி தலைவர்களுடனான கலந்துரையாடல்களின் பின்னரே பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டில் பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பதாக கூறினார்கள். ஆனால் இன்று வரையில் அது நடந்ததாகத் தெரியவில்லை. 

தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாகக் கூறுகின்றனர். இது நல்ல விடயம். எனினும் நாட்டில் காணப்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது முக்கியமானதாகும். அரசாங்கம் அந்த விடயத்தில் தோல்வியையே சந்தித்துள்ளது. 

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.