தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சுயசரிதையை இரும்பு பெண்மணி என்ற பெயரில் படமாகவிருக்கிறது. இதில் ஜெயலலிதாவாக நடிக்க ‘மெர்சல்’ பட நாயகி நித்யா மேனன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து படத்தின் இயக்குநர் பிரியதர்ஷினி தெரிவிக்கையில், 

ஜெயலலிதாவின் வாழ்க்கையை நடிகையாக பிரபலமானதில் இருந்து தொடங்கி, வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று மரணமடையும் வரையில் படமாக்கவிருக்கிறேன். 

இதற்காக அவர் நடிகையாக இருந்தபோது அவருடன் உரையாடிய நடிகர் நடிகைகள், அவரின் திரையுலக வாழ்க்கைக்கு பயன்பட்ட ஸ்டூடியோக்கள், அரங்கங்கள் ஆகியவற்றை மீண்டும் உருவாக்கவிருக்கிறோம். 

தனியொரு பெண்ணாக இந்த அரசியல் களத்தில் போராடி வெற்றிப் பெற்றதை குறிக்கும் வகையில் படத்திற்கு இரும்பு பெண்மணி என்று பெயரிட்டிருக்கிறோம். 

பல நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம். இறுதியில் நடிகை நித்யாமேனன் மட்டும் துணிச்சலாக நடிக்க ஒப்புக்கொண்டார். நடிகை வரலட்சுமி சசிகலாவாக நடிக்கவிருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும், படத் தொடக்கவிழாவும் பிப்ரவரி 24 ஆம் திகதியன்று நடைபெறும்.’ என்றார்.