அமெரிக்காவை சேர்ந்த சவன்னா என்ற 22 வயது பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் காணாமல் போனதால் இது குறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே சவன்னாவின் சடலம் ஒரு காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டமையானது, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரித்து வந்த போலீஸார் சவன்னாவின் பக்கத்து வீட்டாரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மீது சந்தேகித்த போலீஸார் அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

இதில், குழந்தை இல்லாத ஜோடி குழந்தைக்கு ஆசைப்பட்டு கர்ப்பிணியாக இருந்த சவன்னாவின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்துள்ளனர்.

இதில் சவன்னா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  போலீஸார் அந்த ஜோடியை கைது செய்தனர். குழந்தைக்காக ஒரு அப்பாவி பெண்ணை கொலை செய்த இவர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.