அம்பாறை, உஹன பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

18 க்கும் 38 வயதுக்கும் இடைப்பட்ட சிலரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து வெடி மருந்துகள் உட்பட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.