ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்புச் செயலாளர் கோத்­தபாய ராஜ­பக்ஷ ஆகி­யோரைக் கொலை செய்ய சதி செய்யும்  வித­மாக பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தொலை­பே­சியில் கலந்­து­ரை­யா­டி­ய­தாகக் கூறப்­படும் விடயம் தொடர்பில், சி.ஐ.டி. முன்­னெ­டுக்கும் சிறப்பு விசார­ணை­களில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ர­விடம்  விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.  

இதுவரை சி.ஐ.டி.யின் மனிதப் படு கொலைப் பிரிவு முன்­னெ­டுத்­துள்ள சிறப்பு விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வல்­களை மையப்­ப­டுத்தி பொலிஸ் மா அதிபர் பூஜித்­திடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தரவை எப்­போது விசா­ரிப்­பது என்­பது குறித்து நேற்று வரை அறி­விக்­கப்­ப­ட­வில்லை.