அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்தமையால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு வெற்றிகரமான முறையில் முகங்கொடுக்க தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

எனவே, இந்த நெருக்கடி தொடர்பில் மேற்கொள்ள  வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரமர் கூறினார்.

கடந்த காலத்தில் சவால்களுக்கு முகங்கொடுத்து முன்னோக்கிச் சென்றதைப் போன்று டொலரின் பெறுமதி அதிகரித்தமையால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு வெற்றிகரமான முறையில் முகங்கொடுக்க இருக்கின்றுாம்.

கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட மாட்டாது. டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமை இலங்கைக்கு மாத்திரம் ஏற்பட்டுள்ள பிரச்சினை அல்ல. 

இத்தாலி நாணயம், ஸ்ரேலிங் பவுண், அவுஸ்திரேலிய டொலர், இந்தோனேசிய ரூபா,கொரிய நாணயம், பிலிப்பைன்ஸ் நாணயம், சிங்கப்பூர் டொலர், மலேசிய றிங்கிட் என்பனவற்றின் பெறுமதியும் குறைவடைந்துள்ளது. 

நாம் உலக பொருளாதார நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதாகவும் அதிலிருந்து தப்பியோட முனையவில்லை என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

நாத்தாண்டிய லூர்து மகாவித்தியாலயத்தில் வள மத்திய நிலையத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.