தான்சானியா நாட்டில் விக்டோரியா ஏரியில் பயணித்த படகு நீரில் மூழ்கி  விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது. 

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் விக்டோரியா ஏரியில் சென்ற சொகுசு படகு ஒன்று உகாரா தீவு அருகே நீரில் மூழ்கியது இந்நிலையில் தகவல் அறிந்தது மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர்.

அதற்குள் படகு முழுவதும் நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் பலர் பலியாகினர். தற்போது பலி எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணியில் 4 நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்களில் இரவரை மட்டும் உயிருடன் மீட்டுள்ளனர். படகில் 200 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால் 300-க்கும் மேற்பட்டோர் ஏற்றப்பட்டனர். இதனால் எடை அதிகரித்து பாரம் தாங்காமல் படகு ஏரியில் மூழ்கியதாக உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

படகு மூழ்கி விபத்துக்கு காரணமாணவர்களை கைது செய்ய தான்சானியா நாட்டின் ஜனாதிபதி ஜான் மகுபுலி உத்தரவிட்டுள்ளார். இன்னும் பலர் மீட்கப்படாமல் உள்ளதால். அவர்களை மீட்கும் பணி இடம்பெருகிறது.