ட்ரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Published By: Digital Desk 4

23 Sep, 2018 | 07:29 PM
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலையில் விரைவில் துப்பாக்கி குண்டு பாயும் என “பேஸ்புக்” வலைதளத்தில் மிரட்டல் விடுத்த இளைஞர் 3 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்காவில் பென்சில்வேனியாவை சேர்ந்த 27 வயதான ‌ஷர்வன் ரிச்சர்ட் கிறிஸ்டி என்பவர் கடந்த ஜூன் மாதம் ‘பேஸ்புக்‘ சமூக வலைதளத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக கருத்துகள் வெளியிட்டிருந்தார்.

அதில், “உங்கள் (ட்ரம்ப்) தலையில் துப்பாக்கி குண்டு பாயும், அது விரைவில் நடக்கும் என்பதை உறுதியளிக்கிறேன் என கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து பென்சில்வேனியா பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். ஆனால் பொலிஸாரிடம் சிக்காமல் அவர் தலைமறைவாக இருந்தார்.

இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிள்ளர் ஒகியோவில் வைத்து அவரை பொலிஸார் கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்து ‘380 காலிபர்’ ரக கைத்துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கார்கள் மற்றும் துப்பாக்கிகளை திருடி அமெரிக்கா மற்றும் கனடாவில் விற்று வந்ததுள்மை தெரியவந்தது. இதைனையடுத்து அவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33