(நா.தினுஷா)

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சியிலிருந்து விலகியச் சென்ற 16 உறுப்பினர்களும் சூழ்ச்சி செய்து வருகின்றனர் என சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

மேலும் அரசாங்கத்தின் இருப்பிரதான கட்சிகளிடையில் தற்போது  எவ்விதமான முரண்பாடுகளும் கிடையாது.  கூட்டிணைந்த ஆட்சி முறையே இடம்பெறுகின்றன.

அத்துடன் மாகாணசபைத் தேர்தலை காலந்தாழ்த்துவதற்கான எவ்வித அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை. தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.