(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடாக காணப்படுகின்றது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, மாகாண சபை தேர்தலை நடத்தினாலும், நடத்தாவிடினும் அரசாங்கத்திற்கு தோல்வியே கிடைக்கும் எனவும் தெரிவித்தார். 

அத்துடன் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான எல்லை நிர்ணய  மீளாய்வு அறிக்கை  சமர்ப்பிப்பதற்கு பிரதமர் தலைமையிலான  ஐவர் அடங்கிய குழுவினரால்  மேலும் 02 மாதகால அவகாசம் கோரப்பட்டுள்ளமையும் தேர்தலை பிற்போடுவதற்கு ஒரு காரணமாகும் எனவும் அவர் தெரிவத்தார்.