வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை பாதை தொடர்பாக அப்பகுதி மக்கள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத்ததலைவரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
இதையடுத்து அவ்வீதி தொடர்பாக தெளிவின்மை நிலை காணப்பட்டுள்ளது இதையடுத்து புகையிரதத்தை மறித்து போராட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு அப்பகுதி மக்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
எனினும் நிலைமைகளை சீர் செய்வதற்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் கோகிலகுமார் அஞ்சலா ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் அப்பகுதி மக்கள் பிரதேச சபைத் தலைவர் ஆகிய முற்தரப்பினர் ஒன்றிணைந்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து மக்கள் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 16 ஆம் திகதி காலை 10.30 மணிளவில் ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையைக் கடக்க முற்பட்ட கார் ஒன்றுடன் புகையிரதம் மோதுண்டதில் காரில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து அவ்வீதி தொடர்பாக அப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினருக்கும் இடையே முரன்பாடுகள் ஏற்பட்டுள்ளதுடன் வீதி தொடர்பான விளக்கமின்மை ஏற்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் ஓமந்தை பொலிஸாருக்கு பாதை தொடர்பாக அனுப்பிய கடிதம் பன்றிக்கெய்குளம் பகுதி மக்கள் இடையே முரன்பாடுகள் ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக அப்பகுதி வட்டார பிரதேச சபை உறுப்பினர் திருமதி கோகிலகுமார் அஞ்சலாவை அப்பகுதியிலுள்ள அம்மன் ஆலய பூசகர், நிர்வாகத்தினர் தொடர்பு கொண்டு வீதி தொடர்பாக விளக்கத்தைக் கேட்டறிந்தனர்.
தமது எதிர்ப்பு போராட்டம் ஒன்றினையும் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து முற்தரப்பு கலந்துரையாடல் ஒன்றினை ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத்தலைர், பிரதேச சபை உறுப்பினர், ஆலய நிர்வாகத்தினர் கலந்துகொண்டு விபத்து இடம்பெற்ற வீதி தொடர்பான விளக்கங்களைக் கேட்டறிந்தனர்.
இதனிடையே இணக்கம் ஏற்பட்டதுடன், குறித்த வீதி தொடர்பாக பிரதேச சபையின் கவனத்திற்குக்கொண்டுவரப்பட்டு தீர்மானம் ஒன்று அடுத்த சபைக்கூட்டத்தில் எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்படவிருந்த மக்கள் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் திருமதி கோகிலகுமார் அஞ்சலா தெரிவித்துள்ளார்.
குறித்த பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை வீதியில் 15 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருவதுடன் பாதையைப்பயன்படுத்தியும் வருகின்றனர் கடந்த 1983ஆம் ஆண்டிலிருந்து குறித்த வீதி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. யுத்தம் நிறைவுற்ற பிறகு புகையிரதப்பாதை அமைக்கப்பட்டுள்ளதால் அவ்வீதியை உயர்த்தி செப்பனிட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க ஆலயம், இந்து ஆலயம் என்பன காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM