(எம்.மனோசித்ரா)

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடணத்தின் 70 ஆண்டு நிறைவினை நினைவு கூறும் முகமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இளைஞர் முகாமொன்றினை நடத்த தீர்மானித்துள்ளது. 

இவ் இளைஞர் முகாமினூடாக பங்குபற்றுனர்கள்  தனிப்பட்ட மற்றும் கூட்டு அடையாளத்தினை வெவ்வேறு மனித உரிமைகள் சூழ்நிலையில் அவர்களின் வகிபங்கை ஆராய்ந்து புரிந்துணர்தல் உள்ளடங்கலாக மனித உரிமைகள், பன்மைத்துவத்தன்மை மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான கற்கையும் உரையாடலும் தொடர்பாக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை விருத்தி செய்துகொள்ள முடியும்.

இதில் பங்குபற்ற விரும்பும் இளைஞர், யுவதிகள் விண்ணப்பங்களை ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து (www.hrcl.lk) ) அல்லது அந்தந்த பிரதேச செயலகங்களில் அல்லது இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயங்களில் பெற்றுக் கொள்ள முடியும். 

மேலதிக தகவல்களை 011-2505569 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.