(இரோஷா வேலு) 

கிரிபத்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உணுபிட்டிய ரயில் கடவைக்கருகில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 27 வயதுடைய வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். 

பேலியகொட பிரதேசத்திலிருந்து கிரிபத்கொட பகுதிக்கு முச்சக்கர வண்டியொன்றில் ஹெரோயின் கடத்தி வரப்படுவதாக கிரிபத்கொட பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கிணங்கவே முச்சக்கர வண்டியை மடக்கிப்பிடித்த பொலிஸார் அவரை கைதுசெய்ததுடன் அவரிடமிருந்து 20 கிராம் 45 மில்லிகிராம் ஹெரோயினை கைப்பற்றியுள்ளனர்.