14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர்- 4' சுற்றில் இன்று இரண்டு போட்டிள் இடம்பெறவுள்ளன.

'சுப்பர்- 4' சுற்றில் மொத்தம் 6 போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் நான்கு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடி, முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற 'சுப்பர்- 4' சுற்றின் முதல் போட்டியில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றிருந்தது.

இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின இதில் பாகிஸ்தான் அணி 26 ஓட்டங்களினால் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

இந் நிலையில் இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 'சுப்பர் -4' சுற்றின் மூன்று, நான்காவது போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியையும் (துபாய்), ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணியையும் (அபுதாபி) எதிர்கொள்கிறது.

இந்திய, பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் இவ் இவரு அணிகளும் கடந்த போடடியின் போது வெற்றயீட்டிமையினால் இப் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிச் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பினை பெற்றுக்கொள்ளும்.

அதன்படி இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றயீட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியை பொறுத்தவரையில் கடைசிப் போட்டியின் போது இவ்விரு அணிகளும் தோல்வியை தழுவிக் கொண்டமையினால் இப் போட்டி முக்கியமானதொரு போட்டியாக அமையுள்ளது. 

இப் போட்டியில் தோல்வியைத் தழுவிக் கொள்ளும் அணி தொடரிலிருந்து வெளியேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி இன்று இடம்பெறவுள்ள போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றயீட்டிய பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட  தீர்மனித்துள்ளது.