நாட்டு மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் மற்றும் கொடுப்பனவுகளை உடனடியாக அதிகரிக்க சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான குழு தீர்மானித்துள்ளது. 

தற்போது உத்தியோகபூர்வ வீடுகள் கிடைக்காத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீட்டு வாடகையாக மாதாந்தம் 50 000 ரூபாவும் அலுவலகமொன்றை நடத்திச்  செல்வதற்கும் மேலதிக பணம்  பெற்றுக் கொடுப்பதெனவும் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கடந்த வாராம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

இதற்கும் மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பாவிக்கும் இரண்டு தொலைபேசிகளுக்கு தற்போது பாராளுமன்றம் கட்டணம் செலுத்தும் முறைக்கு பதிலாக 50 000 ரூபா கொடுப்பனவை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசமைப்பு சபையாக பாராளுமன்றம் கூடும் தினங்களில் பாராளுமன்றத்துக்கு வருகை தரும் உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு 2500 ரூபா கொடுப்பனவு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த தீர்மானங்களுக்கு விரைவில் அமைச்சரவை  அங்கீகாரம் பெறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.