பொலிஸாரின் அக்கறை இன்மையே தமிழ் இளைஞனின் கொலைக்கு காரணம் ; பழனி திகாம்பரம்

Published By: Digital Desk 4

23 Sep, 2018 | 03:30 PM
image

பொலிசார் சரியாகவும் நேர்மையாகவும் கடமைகளை செய்திருந்தால் இவ்வாறான கொலை சம்பவங்கள் இடம்பெற்றிருக்காது. பொலிஸாரின் அக்கறை இன்மையே இதற்கு காரணமாகும் என்று அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கடந்த 19 ஆம் திகதி கடத்தப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட இரத்தினபுரி கொலுவாவில பாம்கார்டன் தோட்டத்தை சேர்ந்த டி.விஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் திகாம்பரம் நேற்று இறுதி அஞ்சலி செலுத்தியபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கயைலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்த அமைச்சர் திகாம்பரம் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தோட்ட மக்கள் ஒருபோதும் பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்கள் அல்ல. மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வரும் தோட்ட மக்களை கசிப்புகாரர்களே இவ்வாறான பிரச்சினையை ஏற்படுத்தி இளைஞர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ள விடயமானது ஒரு கீழ் தரமான செயலாகும்.

கசிப்பு பிரச்சினை தான் கடைசியாக இனவாத பிரச்சினையாக மாறுகின்றது. அதன் பின் சிங்கள தமிழ் மக்கள் மோதி கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

மேற்படி சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று ஒருவர் தொலைபேசின் மூலம் தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்து எனக்கு தெரியபடுத்தினார். அதன் பின்பு நான் பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினேன். 

பொலிஸார் இது குறித்து கவனிப்பதாக என்னிடம் கூறினார்கள். இருந்தபோதிலும் அறிவித்து இரண்டு மணித்தியாலயத்தில் இளைஞன் கொலை செய்யப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. பொலிஸார் சரியாக இருந்திருந்தால் இந்த கொலை ஏற்பட்டிருக்காது இந்த விடயம் குறித்து நான் இன்று இரத்தினபுரி பிரதி பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்கவுடன் கலந்துரையாடினேன்.

இன்று இந்த தோட்ட மக்களை இந்த கிராம மக்களே கொலை செய்தால் இந்த தோட்டமே அழிந்து விடும். இதுபோல் பெரும்பான்மை ஒருவருக்கு நடந்திருந்தால் இன்று தோட்டத்தில் உள்ள முழு லயன் அறைகளையும் தீயிட்டு கொழுத்தி இனவாத்தை ஏற்படுத்திருப்பார்கள். இது குறித்து நான் கவலை அடைகிறேன்.

தற்போது கொலையுடன் சம்பந்தப்பட்ட நான்கு பேரை பொலிஸார் கைது செய்தள்ளனர். மேலும் இச்சம்பவத்தடன் தொடர்புடைய 15 பேர் உள்ளனர் இவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும். யாரையும் யாருக்கும் கொலை செய்ய உரிமை இல்லை.

எனவே இச்சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நான் பொலிஸ்மா அதிருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

மேற்படி தோட்டத்தில் பொலிஸ் நிலையமொன்றை அமைப்பதற்கு தேவையான நடவடிக்களை உடனடியாக மேற்கொள்ள உள்ளேன் என்று அமைச்சர் பழனி திகாம்பரம் மேலும் தெரிவித்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் யெஹியா எம்.இப்லார், இரத்தினபுரி மாநகர சபையின் உறுப்பினர் பத்திராஜா வாசன்பிள்ளை, இரத்தினபுரி மாநகர சபையின் உப மேயர் லக்ஷ்மன் முனசிங்க, தமிழ் முற்போக்கு முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எம்.சந்திரகுமார் உட்பட பல பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50