லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரத்திற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணமாகியுள்ளார்.

15 வயதான நடாஷா எட்னன், புறப்படும் முன்னர் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து அவருக்கு பிடித்தமான சாண்ட்விச் ஒன்றையும் சாப்பிடுவதற்காக வாங்கிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் இளம் பெண் நடாஷா ஒவ்வாமையால் அவதிப்பட்டுள்ளார்.

நடாஷாவின் தந்தை, மகளின் நிலை கண்டு அவதிப்பட்டு, இருமுறை மருந்து அளித்துள்ளார். இருப்பினும் நடாஷாவின் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை.

இதனையடுத்து நைஸ் நகரில் சென்றடைந்தது அவரை உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நடாஷா மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நடாஷா சாண்ட்விச் வாங்கிய கடையில் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.