பொலன்னறுவை, பழுகஸ்தமன பகுதியில் தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குடும்ப பிரச்சினை ஒன்று காரணமாக இந்த கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிவித்தனர்.

கத்திக் குத்துத் தாக்குதலுக்கிலக்கான பொலன்னறுவை பலுகஸ்தமன பகுதியைச் சேர்ந்த ஹீன்பண்டா (வயது 69) என்பவர் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டபோதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.