படுகொலை செய்யப்பட்ட டி.விஜேரத்தினத்தின் இறுதிக் கிரியை பலத்த பாதுகாப்படன் நேற்று பெருந்திரளான மக்கள் மத்தியில் இடம்பெற்றது.

கடந்த 19 ஆம் திகதி கடத்தப்பட்டு அடித்து படுகொலை செய்யப்பட்ட இரத்தினபுரி கொலுவாவில பாம்கார்டன் தோட்டத்தை சேர்ந்த டி.விஜேரத்தினத்தின் இறுதிக் கிரியைகள் பலத்த பாதுகாப்படன் நேற்று மாலை பெருந்திரளான மக்கள் மத்தியில் இடம்பெற்றது.

நேற்று இடம்பெற்ற டி.விஜேரத்தினத்தின் இறுதிக் கிரியை ஊர்வலத்தில்; “கொலையாளிகள் அனைத்து விதமான போதை வஸ்து விற்பனையாளர்கள்” என குறிப்பிட்ட சந்தேகநபர்களின் படம் தாங்கிய பதாதைகளை மக்கள் ஏந்தி இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

மேற்படி இறுதிக் கிரியை ஊர்வலத்தில் இரத்தினபுரி மாநகர சபையின் உறுப்பினர் பத்திராஜா வாசன்பிள்ளை, தமிழ் முற்போக்கு முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எம்.சந்திரகுமார் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட தமிழ் சிங்கள முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்