மாத்தளை - தம்புள்ள பிரதான வீதியில் மணல் ஏற்றும் டிபர் வாகமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவத்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் லெனதோர என்ற இடத்திலேயே இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் நாலந்தா பகுதியைச் சேர்ந்த 24 வயதையுடை இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார்  டிபர் வண்டியின் சாரதியை கைதுசெய்துள்ளனர்.